மோரின் நன்மைகள்

0.2 mor

 

தயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். ‘இந்திரனுக்குக்கூடக் கிடைக்காத அற்புதம்’ என இதை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். அன்றைய காலங்களில் வீடுகளில் வெயிலில் களைத்து வருபவர்களுக்கும் இல்லத்தினருக்கும் விருந்தினர்களுக்கும் அன்புடன் மோர் தருவது வழக்கம். இப்போது குளிர்பானங்கள் அருந்துவதே நாகரிகம் என்று மோர் அருந்தும் வழக்கம் குறைந்து விட்டது. எத்தனை வண்ணங்களில் குளிர்பானங்கள் சந்தையில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா? எந்தப் பக்க விளைவுகளும் தராத, அதிக நன்மைகள் உடலிற்கு வழங்கவல்ல மோரினால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்வோம். கோடையின் உஷ்ணத்தைத் தணிக்கவும் நோய் நொடிகளின்றி வாழவும் மோரைப் பருகுவோம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

 

நீர் மோர் செய்யும் முறை:

 

0.2neermor

 

 

தேவையானவை:
தயிர் – 1/2 கப்
தண்ணீர் – 1 ½ கப்
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது.)
மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
பச்சைமிளகாய் – அரைமிளகாய் அளவு- 2 கப் மோருக்கு. (காரம் உங்கள் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.)
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்- சிறிதளவு
வெந்தயம்- 4(விரும்புவர்கள் சேர்க்கலாம்)

 

செய்முறை:

 

ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு சிலுப்பிவிடவும். கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்துவிடும். தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரிந்துவிடும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாய்,பெருங்காயம், தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும். சுவையான இந்த நீர்மோரை டம்ளரில் ஊற்றிப் பருக அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

 

மோரினால் கிட்டும் நன்மைகள்:

 

1. தயிரை விடச் சிறந்தது மோர். எளிதில் ஜீரணமாகக் கூடியது.
2.உடல் எடையைக் குறைக்கவல்லது, உணவு உண்ட பின் ஒரு குவளை நீர்மோர் பருகினால் உண்ட உணவுகள் விரைவில் சீரணமாகி உடலைச் சீராக வைக்கும்.
3. பெண்களின் மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் போக்கைக் கட்டுப்படுத்தவும் வயிற்றுவலியைக் குறைக்கவும் வெந்தயம் சேர்த்த நீர்மோர் உதவும்.
4.மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து.
5. வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து.
6. மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும்.
7. வெயிலால் உடம்பு சூடாகி சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால் அதற்கும் மருந்து இதுதான்.
8. நீர்க்கடுப்பைப் போக்கும் அருமருந்து, ரத்தசோகைக்கும் மோர் நல்லது!
9. நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம் உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு!
10. பால், மோ‌ர், பழ‌ச்சாறுக‌ள் அ‌ளி‌ப்பது குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் வள‌ர்‌ச்‌சி‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.
11. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு இரண்டு விதங்கள்: ஒன்று சாதாரணமானது, மற்றது கிருமியால் ஏற்படுவது.
12. வ‌யி‌ற்று‌ப் போ‌க்கு ஆகு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ஒரு நாளைக்கு 4 முறை மோர் கொடுக்கலாம். மோரை அ‌ப்படியே அ‌ளி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌க்‌கு‌ம் எ‌ன்று பய‌ப்படு‌ம் தா‌ய்மா‌ர்க‌ள், ‌சி‌றிய வாண‌லி‌யி‌ல் த‌யிரை லேசாக கொ‌தி‌க்க வை‌த்து ‌சி‌றிது ம‌ஞ்ச‌ள் தூ‌ள் கல‌ந்து சாத‌த்‌தி‌ல் ‌பிசை‌ந்து கொடு‌த்து வரலா‌ம்.
13.காமாலை நோயைச் சாந்தப்படுத்தும். எந்த விதமான பேதியையும் கட்டுப்படுத்தும்.
14.எளிதில் செய்து விடக் கூடிய மோரைக் குடும்பத்திலுள்ள அனைவரும் பருகிப் பயன் பெற வேண்டும்.

 

சரும‌த்‌தி‌ற்கு உக‌ந்த மோ‌ர்:

 

1. முக‌த்‌தி‌ல் த‌யி‌ர், பா‌ல் ஏடு தே‌ய்‌த்து வருவது தெ‌ரியு‌ம். சரும‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌நோ‌ய்களு‌க்கு மோ‌ர் ‌சிற‌ந்த மரு‌ந்தாக உ‌ள்ளது.
2. சரும‌த்‌தி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌தியை மோ‌ரி‌ல் நனை‌த்த து‌ணியை‌க் க‌ட்டு‌ப் போ‌ட்டு வருவத‌ன் மூல‌ம் சரும பா‌தி‌ப்பு ‌விரை‌வி‌ல் குணமடைவதை‌க் காணலா‌ம்.
3. தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

 

குறிப்புகள்:

 

வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்குத்‌ தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம். உடல் சூட்டை தணிக்கும்.

கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்.

ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது.

 

*****************************************************************

பழைய சாதத்தின் நன்மைகள்

Image

எங்கள் ஊர் கிராமத்திற்கு விடுமுறைக்குச் செல்லும் போது முந்தின நாள் நீர் ஊற்றி வைத்த பழைய சாதத்திற்கு மறு நாள் காலையில் நீ, நான் என்று போட்டி நடக்கும். அதிலும் பாட்டி, சித்திகள் கையால் பழையசாதத்தை நீர் போகப் பிழிந்து உப்பும் நல்லெண்ணெயும் இட்டு இட்லி மிளகாய்ப்பொடியும் சேர்த்து பிசைந்து கையில் உருண்டைகளாகத் தர அதற்குச் சண்டையே வரும். இந்த முறைக்கு உப்பெண்ணெய்ச்சாதம் என்று பெயர். இன்னொரு முறையில் முந்தின நாள் மீந்த சாம்பார், ரசம், அவியல் அனைத்தையும் ஒன்றாகக் காய்ச்சி பழைய சாதத்துடன் மோர் உப்பு போட்டுக் கலந்து சுண்டக்கஞ்சிக்குழம்பையும் தொட்டுக்கக் கொடுப்பார்களே..சுவைக்கு முன் அமிழ்தம் தோற்று விடும்.குளிர்சாதனப்பெட்டி இல்லை என்ற கவலை இல்லை, பழையது என்ற முகச்சுழிப்பு இல்லை. அந்தப் பழைய சாதத்தைப் பாசத்துடன் பரிமாறும் போது கொள்ளை அன்பு பசியைத் தூண்டி ருசியை அதிகமாக்கும். மதியம் வரை வேறு எதுவுமே உண்ணத் தேவையில்லை, பசிக்கவே பசிக்காது. எந்த நோய் நொடியும் அண்டாது. நாள் முழுக்கப் பழைய சாதம் நம்மைச் சுறுசுறுப்புடன் வைக்கும்.
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.

1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
2. பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது,
3. உடற்சோர்வு நீங்கி, உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
4. தணித்து உடலிற்குக் குளிர்ச்சியை உண்டாக்கும்.
5. சிறுகுடலுக்கு நன்மை பயக்கும்.
6. குடல்புண், ஓவ்வாமை, அரிப்பு போன்றவை சரியாகும்.
7. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
8. உடை எடை குறையும்.
9. காலையில் சாப்பிடும் பழைய சாதத்தால் நண்பகல் வரை வேறு எந்த உணவையும் தேடாது.
10. தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ‘ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்’ (கவனியுங்கள்: ‘மில்லியன்’ அல்ல ‘ட்ரில்லியன்’) பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

பழையதைச் சாப்பிடுவதையே அநாகரிகமாக நினைக்கும் இன்றைய பிள்ளைகளுக்குப் பழைய சாதத்தின் மகிமை தெரியாதது வருத்தமே..பீட்ஸா, பர்கர், பொரித்த உணவுகள், மோசமான உணவுகள் என்று உடலிற்குத் தீங்கான விஷயங்களுக்குக் காசு கொடுக்கும் பிள்ளைகளுக்குப் பழைய சோற்றின் மகிமையைச் சொல்லி வளர்க்க வேண்டும். பெரியவர்கள் சொன்னது, செய்தது பல உள்ளர்த்தங்களில் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நம் சமையலறை அஞ்சறைப்பெட்டிகளில் வியத்தகு விஷயங்கள் இருக்கின்றன. பாட்டிகளிடம் கேட்டால் தங்கள் அனுபவ அறிவால் எது உடலிற்கு நன்மை பயக்கும் என்பதைப் புட்டு புட்டு வைப்பார்கள்.. மூத்தோர் சொல் அமிழ்தம்.பழையசாதத்தில் கொஞ்சமாய் உப்பிட்டு மோரைக் கரைத்து சின்னவெங்காயம் அல்லது பச்சை மிளகாயுடன் சாப்பிட்டால் இந்தக் கோடை வெயிலிற்கு ஜிலீரென்று இருக்கும்.  கிராமங்களில் வயலோரம் வேலை செய்பவர்களுக்குத் தெம்பு எதிலிருந்து கிடைத்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம். கோடை காலத்தின் உஷ்ணத்தைத் தடுக்கவும் கண்ட வியாதிகள் அண்டாமல் தவிர்க்கவும் பழையசாதத்தை உண்ணுங்கள். என்ன சாதத்தில் தண்ணீர் ஊற்றப் போயிருக்கிறீர்களா? சபாஷ்.