கொண்டைக்கடலை சுண்டல்

Image

தேவையானவை:
ஊற வைத்தக் கொண்டக்கடலை-  2 டம்ளர்
சாம்பார் தூள்- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் – 1
பச்சைமிளகாய்- 1
இஞ்சி – 1 துண்டு
கறிவேப்பிலை- 1 இணுக்கு
காயம்- சிறிதளவு

செய்முறை:

1. கொண்டக்கடலையை முந்தின நாள் இரவே ஊற வைக்கவும், அல்லது 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. குக்கரில் கொண்டைக்கடலையுடன் உப்பு சேர்த்து 5 விசில்களுக்கு வைத்து எடுக்கவும்.
3. தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு வெந்தக் கொண்டைக்கடலையைச் சேர்த்து வதக்கவும்.
4. சுண்டல் ஒன்று சேர்ந்ததும் சாம்பார் தூளைச் சேர்த்துச் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கி இறக்கவும்.
5. விருப்பமானவர்கள் தேங்காயைத் துருவிச் சேர்த்துக் கொள்ளலாம், அவ்வாறு செய்யும் போது சாம்பார் பொடி சேர்க்காமல் மிளகாய்வற்றல் அளவைக் கூட்டிச் செய்யலாம்.