தேவையானவை:
கின்வா(Quinoa)- ஒரு கப்
தண்ணீர்- ஒன்றரை கப்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி,இட்லி மிளகாய்ப்பொடி, கரம் மசாலாப்பொடி- தலா 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- ஒரு தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாவற்றல்- 3
பச்சைமிளகாய்- 2
கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
கொத்தமல்லி- அலங்கரிக்க
எலுமிச்சைச்சாறு- 2 தேக்கரண்டி
வேக வைத்து வதக்க:
துருவிய பீட்ரூட்- 2 கப்
காரட், பட்டாணி- 1 கப்
செய்முறை:
1. கின்வாவை நன்றாக இரண்டு, மூன்று முறை அலம்பி 30 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்
2. அடுப்பை ஏற்றி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாவற்றல், பச்சைமிளகாய் தாளிக்கவும்
3. பீட்ரூட்டைத் துருவித் தாளித்ததுடன் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும். ஐந்து நிமிடங்களில் வதங்கி விடும்.
4. தனியே ஒரு பாத்திரத்தில் காரட் பட்டாணியைச் சிறிதளவு நீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும் பீட்ரூட்டுடன் கலக்கவும்.
5. கின்வாவை அலசி ஒரு கப்பிற்கு ஒன்றரை கப் தண்ணீர் விட்டு அடுப்பைக் குறைந்த தீயில் விட்டு வேக விடவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து உப்பு, எண்ணெய் சேர்த்துக் கிளறி விடவும்.
6. வேக வைத்தக் காய்கறிக்கலவையை வெந்த கின்வாவுடன் சேர்க்கவும்.
7. சிறிதளவு இட்லிமிளகாய்ப்பொடி, கரம் மசாலாப்பொடி சேர்த்துப் பதமாகக் கிளறவும்.
8. எலுமிச்சைச்சாறு பிழிந்து ஒன்றாகக் கலந்து எண்ணெய் விட்டு, கொத்தமல்லியைத் தூவவும்.
மிகவும் அருமையான எளிமையான ஆரோக்கியமான உணவு இது. புரதச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த குறைந்தக் கலோரிகள் கொண்ட உணவு கின்வா.