தேவையானவை:
வேக வைத்தக் காராமணி – 1 குவளை
மாங்காய்- சிறியது ஒன்று
வேக வைத்தத் துவரம்பருப்பு- 1 கப்
புளி- நெல்லிக்காய் அளவு
சாம்பார் தூள்- 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி- சிறிதளவு
காயம்- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- சிறிதளவு
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 1
மிளகாய்வற்றல்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
செய்முறை:
1. காராமணியை ஒரு மணி நேரம் ஊற வைத்து குக்கரில் தண்ணீர், உப்பு சேர்த்து காராமணியை 3 விசில் வருமாறு வேக விடவும். துவரம்பருப்பைக் குழைவாக வேக வைக்கவும்.
2. ஒரு வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு தோல் சீவிய மாங்காயை நன்றாக வதக்கவும்.
3. வேக வைத்தக் காராமணியைச் சேர்த்து புளிக்கரைசல்(3 டம்ளர்) விடவும்.
4. இதனுடன் உப்பு, சாம்பார் தூள், காயம்சேர்த்து வேக விடவும்.
5. காயும் பயறும் வெந்ததும் வேக வைத்தப் பருப்பைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.
6. நல்லெண்ணெய் சிறிது விட்டுக் கறிவேப்பிலை கிள்ளிப் போட்டுப் பரிமாறவும்.
7. சாதம், தோசை, இட்லி போன்றவற்றிற்கு அருமையான இணையுணவு. புளிப்பும் காரமும் சேர்ந்த மணமணக்கும் குழம்பு இது. வெங்காயம் சேர்க்க விரும்புவர்கள் மாங்காயை வதக்கும் முன் வெங்காயத்தைப் பச்சை வாசனை போக வதக்கிச் சேர்க்கலாம்.