கோதுமை ரவா உப்புமா

wheat_rava_upma (1)

தேவையானவை:

கோதுமை ரவை- 1 கப்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி- சிறிதளவு
வெங்காயம்- 1
தக்காளி- 1
இஞ்சி- 1 துண்டு

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
பச்சை மிளகாய்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:

1. கோதுமை ரவையைச் சிவக்க வறுத்துத் தனியே தாம்பாளத்தில் ஆற விடவும்.
2. தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு அதிலேயே நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தைப் போட்டுச் சிவக்க வதக்கவும், அடுத்துத் தக்காளி போட்டு வதக்கவும்.
3. பிறகு 2 டம்ளர் தண்ணீர் விடு சுட வைக்கவும்.
4. தண்ணீர் கொதித்துக் காய்கறி வெந்து வரும் போது வறுத்து ஆற விட்ட கோதுமை ரவையை அடிப் பிடிக்காமல் கிளறி வரவும்.
5. தீயைக் குறைத்து வைத்து, 5 நிமிடங்கள் வேக விட சுவையான, சத்துள்ள கோதுமை ரவை தயார். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும். சட்னியோடு பரிமாற ருசி அள்ளும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s