தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப்
உப்பு- தேவையான அளவு
சுடுதண்ணீர்-தேவையான அளவு
எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு
மசாலாப் பொருட்கள்:
பூண்டு- 3 பல்லு
கரம்மசாலாத்தூள்- 1 தேக்கரண்டி
துருவின இஞ்சி- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்- 1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 1
கொத்தமல்லி இலை- அரைக்கைப்பிடி
செய்முறை:
1. பூண்டு, இஞ்சி துருவிக் கொள்ளவும், கொத்தமல்லி இலைகளை மண் போக அலசிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளமாக நறுக்கி மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, மசாலாப் பொருட்களைச் சேர்த்துச் சிறிது சிறிதாகச் சுடுதண்ணீர் ஊற்றிப் பிசைந்து கொள்ளவும்.
3. மாவை அடித்துப் பிசைந்த பிறகு எண்ணெய் அல்லது நெய் இட்டு மூடி வைக்கவும்.
4. எலுமிச்சை அளவு மாவை உருட்டிச் சப்பாத்திகளாக இட்டு கல் சூடானதும் போட்டு எடுக்கவும்.
5. வெந்ததும் எண்ணெய் தடவி இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.
கூடுதல் குறிப்புகள்:
1. சாதா சப்பாத்தி சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கும் இணையுணவு தயாரிக்க இயலாத சூழலில் இருப்பவர்களுக்கும் வித்தியாசமான சிற்றுண்டி.
2. காரம்சாரமாக உள்ள இவ்வகைச் சப்பாத்தியை வெறுமனே உண்ணலாம்.அவரவர் குடும்ப உறுப்பினர்களின் ரசனைக்கும் ருசிக்குமேற்பக் காரம் கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம்.
3. இதற்குத் தால், தயிரே தொட்டுக் கொள்ளப் போதுமானது.