தேவையானவை:
பொட்டுக்கடலை- 1 டம்ளர்
சர்க்கரை(சீனி)- 2 டம்ளர்
நெய்- 3/4 டம்ளர்
ஏலக்காய்த் தூள்- 1/2 தேக்கரண்டி
உடைத்து வறுத்த முந்திரிப்பருப்பு- 2 தேக்கரண்டி
செய்முறை:
1. பொட்டுக்கடலையையும் சீனியையும் மையாகத் திரித்துக் கொள்ளவும்.
2. நெய்யில் வறுத்த உடைத்த முந்திரிப்பருப்பையும் ஏலக்காய்த்தூளையும் மாவில் சேர்க்கவும்.
3. நெய்யைச் சூடாக்கி மாவுடன் கலந்து உருண்டைகள் பிடிக்க சுவையான சத்தான மாலாடு தயார்.
4.பொடியைத் திரித்துத் தயாராக வைத்திருந்தால் விரைவில் மாலாடுகளைச் செய்ய முடியும்.