தேவையான பொருட்கள்:
பச்சரிசி -1கப்
பால் -4 கப்
தண்ணீர் -4கப்
வெல்லம் -2 கப்
நெய் -2 தேக்கரண்டி
முந்திரி -10
திராட்சை -10
செய்முறை:
1. அகலமான அடிகனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு கொதிவந்தவுடன், பச்சரிசியைக் களைந்து அலம்பி அதில் போடவும்.
2. அரிசியுடன் தண்ணீர் அதிகமாகவும் பாலைக் குறைவாகவும் சேர்க்கவும்.
3. அரிசி வேக ஆரம்பித்தவுடன் பாலைச் சிறிது சிறிதாக சேர்க்கவும்.
4. அரிசி வெந்து நன்கு குழைய ஆரம்பித்தவுடன், வெல்லத்தைச் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கரைந்ததும் வடிகட்டி, அரிசியில் ஊற்றவும்.
5. தீயைக் குறைத்து வைக்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து வெந்தவுடன், நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்துப் போடவும்.
வேறொரு முறை:
1. அரிசியுடன் ஒரு கைப்பிடி பாசிப்பருப்பு சேர்த்துத் தண்ணீர் மிகுதியாகவும் பால் குறைவாகவும் வைத்து மிதமான தீயில் 4, 5 விசில்களுக்கு வேக விடவும்.
2. வெந்த அரிசி, பருப்புக் கலவை ஆறினதும் மின் அரைப்பானில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
3. பிறகு மேலே குறிப்பிட்ட வெல்லக்கரைசலைச் சேர்த்து நெய்யில் வதக்கிய முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய்ப் பொடி போட்டுக் கலக்கவும்.
4. வெண்ணெயாய் இருக்கும் பால் பொங்கல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பத்தக்க வகையில் இருக்கும்.